வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிறைய பேருக்கு இருக்கும். ஆனால் அதற்கு நேரமும் இருக்காது என்ன செய்தால் வீட்டை அழகாக மாற்றலாம் என்றும் தெரியாமலும் இருக்கும். அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த ஒரு சில டிப்ஸ்கள் இதனை செய்தாலே போதும் சுத்தமாக வீட்டை வைக்கலாம்.
இதுகுறித்து ஹெசா டேஸ்டி ரெஸிபி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டிப் 1: வீட்டில் வாஷிங் மெஷினில் துணி துவைத்தால் அழுக்கு போகவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இதை பின்பற்றுங்கள். அலுமினியம் பேப்பரை எடுத்து வட்ட வடிவமாக வெட்டி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து ஒரு ஸ்பூன் கம்போர்ட் சேர்த்து அதை நன்கு டைட்டா மடித்து மேலே சின்ன ஓட்டைகள் போட்டு வாஷிங் மெஷினில் துணி மேல் வைக்கவும்.
பின்னர் எப்போதும் போல மெஷின் ஆன் செய்து துணி துவைக்கலாம். இந்த மாதிரி உப்பு போட்டு துவைக்கும் பொழுது துணி பளிச்சென்று இருக்கும். சாயம் போகாது மற்ற துணிகளில் ஒட்டாமல் இருக்கும். பின்னர் அந்த பேப்பரை மெஷினில் இருந்து எடுத்து தூக்கி போட்டு விடலாம். ஒவ்வொரு முறை துணி துவைக்கும்போதும் இந்த முறையை பயன்படுத்தலாம்.
டிப்ஸ் 2: வெளியூர்களுக்கு செல்லும்போது கத்தியை எடுத்து செல்வதற்கு பயமாகத்தான் இருக்கும். பைகளில் கிழித்து விடும், கைகளில் குத்தி விடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால் அதன் மேல் அலுமினிய பேப்பர் சுத்தி எடுத்துச் சென்றால் எந்த பயமும் இல்லாமல் எடுத்து செல்லலாம். அதன் கூரான பகுதிகளில் கொஞ்சம் மொத்தமாக சுற்றலாம்.
அடடா இது தெரியாம கை வலிக்க இடுப்பு வலிக்க துணி துவைச்சோமே!|kitchen tips in tamil|kitchen tips|tips
டிப்ஸ் 3: நாம் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில் அவ்வப்போது ஒரு மாதிரி வாசனை வரும். அது வராமல் இருப்பதற்கு பாட்டிலில் கல் உப்பு, அரிசி, எலுமிச்சை பழம் தோல், சுடுதண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்கு குழுக்கி கழுவி எடுக்கலாம். கல் உப்பு உள்ளே இருக்கும் அழுக்கை எடுத்துவிடும் அரிசியும் கெட்ட துர்நாற்றம் வராமல் இருக்க உதவும்.
டிப்ஸ் 4: நாம் எடுத்து செல்லும் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றும் பிரச்சனை இருப்பவர்கள் பாட்டிலில் தண்ணீர் உற்றாமல் இருக்க ஒரு பலூன் எடுத்து மேலே இருப்பதை வெட்டி எடுத்து பாட்டிலின் வாய் பகுதியில் போட்டு மூடி போடலாம் தண்ணீர் சிந்தாமல் இருக்கும்.