/tamil-ie/media/media_files/uploads/2021/12/cooking_759_.jpg)
சமைப்பது என்பது காய்கறிகள் அல்லது குழம்புகளில் மசாலாவைச் சேர்ப்பது என்று பலர் நினைக்கும் போது, அதில் தேர்ச்சி பெற எவ்வளவு பயிற்சி தேவை என்பதை நாம் மறந்து விடுகிறோம். சில நேரங்களில் நம் ரொட்டி மிகவும் கடினமாக இருக்கலாம், அல்லது மற்ற நேரங்களில் உணவில் உப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும்; ஒரு கண்ணியமான உணவை சமைப்பதற்கான அனைத்து சவால்களையும் கடந்து செல்லும் போது, சமையலறையில் வேலைகளை எளிதாக்குவதற்கு சில தந்திரங்களை சொல்ல விரும்புகிறோம்.
உங்கள் சமையல் திறமையை அதிகரிக்கவும், சிறிய பேரழிவுகளில் இருந்து உங்கள் உணவை காப்பாற்றவும் நீங்கள் வழிகளைத் தேடுகிறீர்களானால், இந்த உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பாருங்கள். இது நிச்சயமாக உங்களுக்கு கைக்கொடுக்கும்!
சப்பாத்தியை மென்மையாக செய்வது எப்படி
நாம் அனைவரும் கடினமான சப்பாத்தியை சுவைத்திருப்போம். அதற்கு காரணம் மாவின் கன்சிஸ்டன்சி மென்மையாக இல்லாதுதான். எனவே, உங்கள் சப்பாத்தி மென்மையாக இருக்க விரும்பினால், மாவை வெதுவெதுப்பான நீரில் பிசையவும். மாவை பிசைந்த பிறகு விரல் பரிசோதனையும் செய்யலாம், ஒரு விரலால் மாவை சிறிது குத்துங்கள், அது மென்மையாக இருந்தால், அது சமையலுக்கு ரெடியாகிவிட்டது. ஆனால், சமைப்பதற்கு முன் குறைந்தது 15 நிமிடங்களுக்கு மாவை பிசைந்து தனியாக வைக்கவும்!
கடையில் வாங்கிய கிரீம் பயன்படுத்தாமல் கிரீமி கிரேவிகளை எப்படி செய்வது?
கடந்த சில ஆண்டுகளில் நம்மில் பெரும்பாலோர் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்களாகிவிட்டோம், மேலும் சமையலில் கூட ஆரோக்கியமான மாற்றுகளைக் கண்டறிய முயற்சிப்பதால், உங்கள் உணவை கிரீம் பயன்படுத்தாமல் கிரீமியாக மாற்றுவதற்கான வழியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பால், மலாய் அல்லது முந்திரி விழுதைப் பயன்படுத்தி கிரேவியின் சுவையை திக்காகவும், ரிச்சாகவும் மாற்றலாம்!
கொண்டைக்கடலை வேகவைப்பது எப்படி (ஒரு மணி நேரத்தில்)?
நேற்றிரவு கொண்டைக்கடலையை ஊறவைக்க மறந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். ஒரு மணி நேரத்தில் அவற்றை தயார் செய்ய இந்த தந்திரத்தை பயன்படுத்தவும். குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு கொண்டைக்கடலை சேர்த்தால் போதும். சிறிது நேரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை ரெடியாகிவிடும்.
ஆல் இன் ஒன் கிரேவி செய்வது எப்படி?
சாப்பாடு தயாரிக்க நேரம் இல்லாமல் போகிறதா? உங்களுக்குத் தேவையான தீர்வு எங்களிடம் இருப்பதால் கவலைப்பட வேண்டாம்! ஒரு கிரேவியில் அனைத்தையும் முன்கூட்டியே தயார் செய்து, நீங்கள் ஒரு வாரம் வரை சேமித்து வைக்கலாம். முதலில், சில தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை எடுத்து மென்மையாக மாறும் வரை வதக்கவும். பின்னர் அனைத்தையும் கலந்து ஃப்ரீட்ஜில் சேமித்து வைக்கவும். தேவைப்படும் போது சூடாக்கி சாப்பிடுங்கள்!
கறிகளில் அதிக உப்பைக் குறைப்பது எப்படி?
நீங்கள் புதிதாக சமைப்பவராக இருந்தால், சில நேரங்களில் அளவீடுகள் தவறாகப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி சமைக்கும்போது நம்மில் பெரும்பாலானோர் சாப்பாட்டில் உப்பு அதிகமாக சேர்த்திருப்போம். எனவே அந்த கூடுதல் உப்பை நடுநிலையாக்குவதற்கான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், அதில் பால் அல்லது மலாய்வை சேர்க்கலாம் – அதன்மூலம், உப்பின் சுவை குறைகிறது.
கொதிக்கும் நீரில் எண்ணெய் சேர்க்கவும்
நாம் உண்பதற்கு முன்பும், சில சமயங்களில் கொதித்த பிறகும் ஒன்றாக ஒட்டிக்கொள்ளும் பல விஷயங்கள் உள்ளன. எனவே பாஸ்தா அல்லது நூடுல்ஸ் போன்ற உணவுகளுக்கு, சரங்களை ஒன்றோடொன்று பிரிக்காமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்க்கவும். உருளைக்கிழங்கை கூட கொதிக்கும் நீரில் சேர்க்கலாம், ஏனெனில் இது அவற்றை எளிதில் உரிக்க உதவுகிறது.
மிருதுவான பூரி செய்வது எப்படி?
சமைத்த பிறகு உங்கள் பூரி கொஞ்சம் நமத்து போகிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவில் கொஞ்சம் ரவாவை சேர்க்கவும். அதனால் பூரி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
கரம் மசாலா செய்வது எப்படி?
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் கரம் மசாலாவும் ஒன்று, ஆனால் பாக்கெட் கரம் மசாலாக்களை மாற்றி, வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலாவை பயன்படுத்த விரும்பினால் அதற்கான குறிப்பு இதோ! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பாத்திரத்தில் சீரகம், கொத்தமல்லி, ஏலக்காய், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் சேர்த்து ஒரு கண்டெய்னரில் சேமிக்கவும்.
பருப்பில் சுவைகளை எவ்வாறு சேர்ப்பது
பருப்பு இந்திய உணவில் முதன்மையானது. அவற்றை வேகவைத்து, மசாலா சேர்த்து உங்கள் பருப்பைச் சுவையாக மாற்ற ஒரு வழி உள்ளது. ஆனால் பருப்பை சமைப்பதற்கு முன் வறுத்து, பின்னர் வேகவைக்கவும். அப்படி செய்தால், உங்கள் பருப்பில் ஒரு ஸ்மோக்கி சுவை இருக்கும்.
எனவே, அடுத்த முறை நீங்கள் சமைக்கும் போது, இந்த உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை முயற்சி செய்து, உங்கள் சமையல் விளையாட்டை மேம்படுத்துங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.