பொதுவாகவே ஆண், பெண் இருவரும் உடலை கட்டுக் கோப்பாக ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவர். இதற்காக உடற்பயிற்சி, யோகா, டயர் ஃபாலோ செய்வர். உடல் எடையை குறைத்தாலும் தொப்பையை குறைப்பது கடினமாக உள்ளது எனப் பலரும் நினைத்திருப்போம். அந்த வகையில் தொப்பையை குறைக்க, ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைக்க நிபுணர்கள் சில வழிமுறைகளை கூறுகின்றனர்.
இஷ்னா பத்ரா மற்றும் ப்ராச்சி ஷா, ஊட்டச்சத்து நிபுணர் ஆகிய இருவரும் சில வழிமுறைகளை தாங்கள் முயற்சி செய்து அந்த அனுபவங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளனர். எளிய வழிகளில் தொப்பை கொழுப்பை குறைக்கலாம் எனக் கூறுகின்றனர்.
டாக்டர். சந்தோஷ் பாண்டே, இயற்கை மருத்துவர், நிபுணர் கூறுகையில், ஒல்லியாக உள்ளவர்களுக்கும்
தொப்பை கொழுப்பு உள்ளது. உங்கள் தோலின் கீழ் உள்ள அதிகப்படியான தொப்பை கொழுப்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். உள்ளுறுப்பு கொழுப்பு எனப்படும் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். ஒல்லியாக இருப்பவர்களிடமும் இதைக் காணலாம் என்று கூறினார்.
தொப்பையை குறைக்க பத்ரா மற்றும் ப்ராச்சி ஷா கூறும் சில டிப்ஸ் இங்கே,
நேரமாக சாப்பிட வேண்டும்
இரவு உணவை நேரமாக சாப்பிடுவது நல்ல வித்தியாசத்தை கொடுக்கும். தூங்குவதற்கு முன் உங்கள் குடல் 3 மணிநேர செரிமான நேரத்தைப் பெற வேண்டும். எனவே, இரவில் நேரமாக சாப்பிடுவது உங்களுக்கு சிறந்த செரிமானத்தை அளிக்கும். உங்களை இலகுவாக உணரச் செய்யும்.
மன அழுத்தம்
பிஸியான வாழ்க்கையில் ஓடிக் கொண்டு இருக்கிறோம். இதில் சற்று அமைதி காக்க வேண்டும். உயர்ந்த அழுத்த நிலைகள் கொழுப்பை தக்கவைக்கும்.
ஆப்பிள் சாறு வினிகர்
உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள். புரோபயாடிக்குகளைச் சேர்ப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். மேலும் உடலில் அதிகப்படியான நீர் தக்கவைப்பை வெளியேற்றுகிறது.
பழச்சாறு
ஒரு கிளாஸ் பச்சை சாறு குடிப்பது உங்கள் குடலை நன்கு சுத்தப்படுத்துகிறது. இதனால் நீங்கள் லேசாக உணருவீர்கள்.
புரதங்கள்
தினமும் போதுமான புரதங்கள் எடுத்துக் கொள்வது நீங்கள் மைய தசைகளை நன்றாக டன்னிங் செய்வதை உறுதி செய்கிறது.
வலிமை பயிற்சி
வாரத்திற்கு மூன்று முறை முக்கிய வொர்க்அவுட்டைச் செய்ய வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
அதிக புரதம் உட்கொள்ளுதல், நல்ல தூக்கம், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என டாக்டர் பாண்டே வலியுறுத்தினார். “தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, இது தொப்பை கொழுப்பை குறைக்க கடினமாக இருக்கும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil