பெரும்பாலும் துணி துவைக்கும் போது நாம் கவனமாக இருந்தாலும், அவ்வப்போது மற்ற துணிகளில் உள்ள சாயம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற சாயத்தை அகற்ற சில வழிமுறைகள் உண்டு. அதன்படி, ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கொண்டே துணிகளில் ஒட்டியுள்ள சாயத்தை எவ்வாறு எளிதாக அகற்றுவது என இப்பதிவில் நாம் காணலாம்
முதலில் துணிகள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இதையடுத்து, சாயம் ஒட்டியுள்ள துணிகளை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பின்னர், நன்றாக ஊறிய துணியை எடுத்து குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் போட்டு துவைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் துணிகளில் ஒட்டியுள்ள சாயத்தை எளிதாக அகற்ற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“