ஒரு மாத்திரை மட்டும் போதும்; உங்க பழைய வெள்ளைத் துணி புதியது போல மாறி விடும்!
வெள்ளைத் துணிகளை எளிமையாக பராமரிப்பது எப்படி என இக்குறிப்பில் பார்க்கலாம். இவை நம் வெள்ளை துணிகளை புதியது போன்று வைத்திருக்க உதவி செய்கின்றன. இதற்காக ஒரு மாத்திரை மட்டும் இருந்தால் போதுமானது.
பெரும்பாலனவர்களுக்கு வெள்ளைத் துணி என்பது விருப்பத் தேர்வாக இருக்கும். முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள், அலுவலக கூட்டம் போன்ற அனைத்து விதமான இடங்களுக்கும் உடுத்திச் செல்வதற்கு ஏற்றதாக வெள்ளைத் துணி இருக்கும்.
Advertisment
அதற்காகவே ஆசை ஆசையாக வாங்கிய வெள்ளைத் துணிகளை நாம் அதிகமாக பயன்படுத்தி இருக்க மாட்டோம். ஏனெனில், வெள்ளைத் துணிகளை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இவற்றில் அழுக்குகள் ஓட்டிக் கொண்டால், அவற்றை துவைத்து போக்குவது சிரமமாக இருக்கும். மேலும், அடிக்கடி வெள்ளைத் துணியை பயன்படுத்தினால் அவை பழுப்பு நிறத்திற்கு மாறும்.
அந்த வகையில், வெள்ளைத் துணியை ஈசியாக பராமரிப்பதற்கு சூப்பரான டிப்ஸை தற்போது காண்போம். இதற்காக, ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்போது 2 டிஸ்ப்ரின் என்ற மாத்திரையை உடைத்து பக்கெட்டில் இருக்கும் தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும். இந்த மாத்திரையை கடையில் இருந்து எளிதாக வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகக் குறைவாக தான் இருக்கும். இத்துடன் துணி துவைக்க பயன்படும் லிக்யுட் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது, வெள்ளைத் துணியை எடுத்து இந்த நீரில் சுமார் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், துணியை துவைத்தால் அதில் இருக்கும் பழுப்பு நிறம் மாறி பார்ப்பதற்கு புதிய வெள்ளைத் துணி போன்று காட்சியளிக்கும். இந்த டிப்ஸை பயன்படுத்தி நமக்கு பிடித்தமான வெள்ளைத் துணிகளை ஈசியாக பராமரிக்கலாம்.