ஈவினிங் நேரம் ஆனதுமே வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி கொசு தொல்லை அதிகமாக இருப்பவர்களுக்காகவே கோமுஸ் லைப் ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கும் வீட்டு குறிப்பு ஒன்றை பற்றி பார்ப்போம்.
Advertisment
வீட்டில் இருக்க பொருட்களை வைத்து வீட்டுக்குள் ஒரு கொசு கூட வராமல் ஒரு பொருள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
விளக்கு - 1
Advertisment
Advertisements
காபித்தூள் 1 பாக்கெட்
கற்பூரம் -3
செய்முறை:
ஒரு விளக்கு எடுத்து அதில் காப்பித்தூள் போடவும். அதன்மேலே 2 கற்பூரத்தை பவுடர் செய்து சேர்க்கவும். பின்னர் மேலே மற்றொரு கற்பூரத்தை வைத்து தீப்பற்றி விடவும்.
இப்படி செய்தால் வீட்டில் ஒரு கொசு கூட வராது. நீண்ட நேரத்திற்கு இந்த விளக்கு எரியும் என்பதால் மாலை ஒருமுறை செய்தால் போதும்.
சிலருக்கு கொசு பத்தி, ஆயில் இது மாதிரியான கொசுவிரட்டிகள் பயன்படுத்தும் போது மூச்சு திணறல், சரும பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மாதிரி செய்வதன் மூலம் எந்த விதமான பிரச்சினையும் வராது.