புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கினால் மட்டும் போதாது. அதன் நிரம்பிய ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க உதவும் வகையில், அவற்றை சரியாக சேமித்து வைப்பதும் மிகவும் முக்கியம். நீங்கள் சில உணவுப் பொருட்களை சமைக்கும்போதும் இது பொருந்தும்.
எனவே, நீங்கள் வாங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் புதியதாகவும், போக்குவரத்து மற்றும் பேக்கேஜிங்கிற்கு மாறாக உள்நாட்டில் விளைந்தவையாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதலாக, செயற்கையாக பழுக்க வைக்கும் முறைகளுக்கு மாறாக, இயற்கையாக பழுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க முயற்சிக்கவும்.
கூடுதலாக, பின்வரும் விஷயங்களை மனதில் வைத்திருப்பது உங்கள் ஆரோக்கியமான உணவு அப்படியே இருப்பதை உறுதி செய்யும்.
குளிர்ந்த சூழலில் வைக்கவும்
நீங்கள் வீட்டிற்கு வரும் வரை உங்கள் வாராந்திர ரேஷனை காரின் பின்புறத்தில் சேமித்து வைத்திருந்தால், அவற்றை அதிக நேரம் அங்கேயே வைக்காமல் இருக்கவும்.
சில காய்கறிகள் பிரிட்ஜில் சிறப்பாக இருக்கும், மேலும், உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு மற்றும் பிற வேர் காய்கறிகள் உலர்ந்த, குளிர்ந்த இடங்களில் சிறப்பாக சேமிக்கப்படுகின்றன. மேலும் முடிந்தால், ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் வாங்குவதற்கும், சேமிப்பதற்கும் மாறாக, ஒவ்வொரு நாளும் புதிய பொருட்களை வாங்க முயற்சிக்கவும்.
சுவாசிக்க விடுங்கள்
சில பழங்கள், காளான்கள் மற்றும் காய்கறிகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகள் அல்லது செலோபேன் மூடப்பட்ட பிளாஸ்டிக் பெட்டிகளில் வருகின்றன. அவற்றை ஒரு காகிதப் பையில் வைக்கவும் அல்லது பிளாஸ்டிக்கில் சிறிது காற்றை அனுமதிக்க சில துளைகளை இட்டு, அதில் வைக்கவும்.
சில நேரங்களில் ஃபிரிஸிங் சிறந்தது
சில நேரங்களில் பழமையானவற்றை உட்கொள்வதை விட, உறைந்திருப்பது சிறந்தது. உறைந்த காய்கறிகள் சத்தானவை, உணவை உறைய வைக்கும் முன் பதப்படுத்தினால் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படுகிறது.
சமைக்கும் போது, ஊட்டச்சத்து இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய, பின்வருவனவற்றை மனதில் கொள்ளுங்கள்:
ஒரு பழம் அல்லது காய்கறியின் வெளிப்புறத் தோல்களை ஆக்ரோஷமாக உரிக்கும்போது வைட்டமின்கள் இழப்பு ஏற்படுகிறது. எனவே, முடிந்தவரை தோலை உரிக்காமல் வைக்கவும் அல்லது நீங்கள் அதை உரிக்க வேண்டும் என்றால், மெல்லியதாக உரிக்கவும்.
- ஒரே உணவை பலமுறை சூடுபடுத்துவதைத் தவிர்க்கவும்.
- காய்கறிகளை வேகவைக்க பயன்படுத்தும் தண்ணீரை, மற்ற உணவுகளில் ஸ்டாக்காகப் பயன்படுத்தலாம்.
- பருப்பு போன்ற சில உணவுகளை நீண்ட நேரம் மற்றும் நிறைய திரவங்களில் சமைப்பதைத் தவிர்க்கவும்.
- முடிந்தவரை காய்கறிகளை சிறிதாக நறுக்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அதன் மூலம் ஊட்டச்சத்துக்களையும் இழக்க அதிக வாய்ப்புள்ளது.
சாட்டிங் மற்றும் ஸ்டீர் ஃபிரையிங் நல்ல விருப்பங்களாகும், ஏனெனில் அவை குறைந்த அளவு திரவத்தைப் பயன்படுத்துகின்றன மற்றும் உணவை விரைவாக சமைக்கின்றன, இது அதன் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.