உங்க வீட்டு பூஜை பாத்திரம் பளிச் ஆகணுமா? சுத்தம் செய்ய இந்த 3 பொருளை யூஸ் பண்ணுங்க!
பூஜை பாத்திரங்களை பளபளப்பாக கழுவுவது எப்படி என்ற சிம்பிளான டிப்ஸை தற்போது பார்க்கலாம். இவற்றை பின்பற்றுவதும் எளிதாக இருக்கும். இதற்காக மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.
நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை சுத்தமாக கழுவி, புதியது போன்று மாற்றக் கூடிய சூப்பரான டிப்ஸை காண்போம். இதற்கு நம்மிடம் மூன்று பொருட்கள் இருந்தாலே போதும்.
Advertisment
ஒரு தட்டில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு புளி கரைசல், பச்சரிசி மாவு, அரை ஸ்பூன் அளவிற்கு உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். பின்னர் பூஜை பாத்திரங்களை எடுத்து, தண்ணீர் விட்டு சாதாரணமாக முதலில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூஜை பாத்திரங்களில் ஈரப்பதம் இருக்கும் போதே, அதன் மீது முதலில் தயாரித்து வைத்திருந்த பேஸ்டை எடுத்து நன்றாக தேய்க்க வேண்டும். இப்போது, ஒரு ஸ்க்ரப்பரை எடுத்து மீண்டும் பாத்திரங்களை தேய்க்க வேண்டும். இதில் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதையடுத்து, இந்த பாத்திரங்களை தண்ணீரில் கழுவி எடுத்தால் அவை சுத்தமாகி விடும். அதன் பின்னர், ஒரு காட்டன் துணி கொண்டு இவற்றின் மீது இருக்கும் ஈரப்பதங்களை துடைக்க வேண்டும். இறுதியாக, சிறிய வெள்ளைத் துணியை எடுத்து, அதில் கொஞ்சமாக விபூதியை தொட்டு பூஜை பாத்திரங்கள் மீது தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் பூஜை பாத்திரங்கள் அனைத்தும் புதிது போன்று காட்சியளிக்கும்.