பயணிகள் கவனத்திற்கு... திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Train

திருவாரூா் -கொரடாச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூா் -கொரடாச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) ஏப்ரல் 29, 30, மே 1-ஆம் தேதிகளில் தஞ்சாவூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால்-திருச்சி டெமு ரயிலானது (76819) ஏப். 29, 30, மே 1-ஆம் தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: