திருச்சி கல்லணை சாலையில் கொட்டிக் கிடக்கும் நெல்மணிகள்: லாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை

நெல்லைச் சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்த பிறகும், அவற்றை குடோன்கள் மற்றும் அரவை நிலையங்களுக்குக் கொண்டு செல்ல லாரிகள் இல்லாததால், கடந்த ஐந்து நாட்களாக நெல் மூட்டைகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையோரங்களில் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன.

நெல்லைச் சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்த பிறகும், அவற்றை குடோன்கள் மற்றும் அரவை நிலையங்களுக்குக் கொண்டு செல்ல லாரிகள் இல்லாததால், கடந்த ஐந்து நாட்களாக நெல் மூட்டைகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையோரங்களில் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன.

author-image
WebDesk
New Update
grains

திருச்சி கல்லணை சாலையில் உள்ள பனையபுரம், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி நடைபெற்று வருகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு திறந்தவெளியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டது.

Advertisment

வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்து, சாக்கு முட்டையில் கட்டி வைத்துவிட்டு, அதனை குடோன்களுக்கும், அரவை நிலையங்களுக்கும் கொண்டு செல்ல லாரிகள் இல்லாததால் கடந்த ஐந்து தினங்களாக நெல் மூட்டைகள் சாலையிலேயே தேங்கிக் கிடக்கிறது. அதேநேரம் கடந்த மூன்று தினங்களாக மழை பொய்த்து வெயில் சற்று கடினமாக அடித்து வருவதால் மேலும் பல குருவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்து தங்களது நெல்லையும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வருவதுடன் எப்போது நெல்லை கொள்முதல் செய்வார்கள் என்று காத்திருக்கின்றனர்.

paddy

இதனால் உத்தமர்சீலி மற்றும் பனையபுரம் கிளிக்கூடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நெல்மணிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் நெல்மணிகளை பாதுகாத்து வைப்பது மிக கடினமாக வேலையாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் காவல் காப்பது சிரமமாக உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு நேரடி கொள்முதல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்வதுடன், லாரிகள் மூலம் உரிய இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: