திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்
இந்நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்க உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்துவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சனிக்கிழமை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் ஒரு பகுதியாக, ஒன்பது நாள் திருவிழாக் காலத்தில், மூத்த மற்றும் சிறப்புக் குடிமக்கள், என்ஆர்ஐ மற்றும் ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் உட்பட அனைத்து ’ஆர்ஜித சேவைகள்' மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்களை ரத்து செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் திருவிழாக் காலத்தின் அனைத்து நாட்களிலும் தெய்வங்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனங்களின் (கேரியர்) தகுதி, பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம், ஸ்ரீவாரி சேவகர்களை பணியமர்த்துதல் மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு பொறியியல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
திருவிழாவின் முக்கிய நாட்களில் அக்டோபர் 8 ஆம் தேதி கருடசேவை, தங்க தேர் (அக்டோபர் 9), ரதோத்ஸவம் (அக்டோபர் 11) ஆகியவை அடங்கும். விழாவின் இறுதி நிகழ்வாக சக்ரஸ்நானம் அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும்.
வாகன சேவைகள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை, தினமும் ஏற்பாடு செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“