திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கடந்த மாதத்தில் கோயிலின் செயல்பாடுகளில் பல மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தார்.
கோகுலம் ரெஸ்ட் ஹவுஸில் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசிய ராவ், கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் பயன்பெறும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையை மறுசீரமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவை அடுத்து கியூ லைன் முறையை சீரமைத்தல், லட்டுகள், அன்ன பிரசாதங்களின் சுவை மற்றும் தரத்தை மேம்படுத்துதல், தரிசன முறையில் சீர்திருத்தங்கள், தங்குமிடங்களை முன்பதிவு செய்தல், சுகாதாரத் தரங்களைப் பேணுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை பராமரிக்கவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (FSSAI) TTD ஒத்துழைத்துள்ளது.
பிரசாதங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை பரிசோதித்து அங்கீகரிக்க பிரத்யேக ஆய்வகத்தை அமைக்கும் திட்டமும் உள்ளது.
நாராயணகிரி தோட்டத்தில் ஒரே அமர்வில் 6,000 பேர் தங்கக்கூடிய புதிய கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மூன்று ஏ.இ.ஓ.க்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தரிசனத்துக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, ஸ்லாட்டட் சர்வ தர்ஷன் (SSD) டோக்கன் ஒதுக்கீடு வாரத்திற்கு 1.05 லட்சத்தில் இருந்து 1.47 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜித சேவை, தரிசனம் மற்றும் தங்கும் இடங்கள் முன்பதிவு செய்வதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய சீர்திருத்தங்கள் செய்யப்படும்’ என்று ஷியாமளா ராவ் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“