திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்... இனி பிரசாதமாக லட்டுடன் புத்தகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனி லட்டுடன் சேர்த்து புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனி லட்டுடன் சேர்த்து புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tirumala Tirupati Devasthanams TTD announce book with laddu Tamil News

இனி பக்தர்கள் லட்டுடன் சேர்த்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகங்களையும் பிரசாதமாகப் பெறுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் (ஏழுமலையான்) கோவில் இருக்கிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு புகழ்பெற்றதாக திகழ்கிறது. 

Advertisment

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் என்றும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்றுள்ளனர். திருப்பதியில் லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் நல்ல திட்டம் என்றும் பலரும் தெரிவித்து வருகிறார்கள். 

Tirupati

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: