திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கும் தேதி, நேரம் குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளுக்கான எலக்ட்ரானிக் டிப் டிக்கெட் முன்பதிவுகள் மே 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி, மே 20 ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெற உள்ளது. இந்த டிக்கெட்களுக்கான கட்டணத்தை மே 20 துவங்கி, மே 22 ஆம் தேதி பகல் 12 மணிக்குள் செலுத்த வேண்டும்.
கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், SD சேவை, ஆகஸ்ட் 15 முதல் 17 வரை நடக்கும் வருடாந்திர பவித்ரோற்சவம் உள்ளிட்ட ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட் மே 21 ஆம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை விர்சுவல் சேவா டிக்கெட்கள் அன்று பகல் 3 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை அங்கப்பிரதட்னத்திற்கான டோக்கன் மே 23 ஆம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையாளர்களுக்கான தரிசனம் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு மே 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் ஆகஸ்டு மாதம் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 23 ஆம் தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் மே 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு மே 24 ஆம் தேதி பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை மற்றும் திருப்பதியில் ஸ்ரீவாரி தன்னார்வ சேவைகளுக்கான பொது கோட்டா முன்பதிவுகள் மே 27 ஆம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவைக்கான முன்பதிவுகள் பகல் 12 மணிக்கும், பறக்கமணி சேவைக்கான முன்பதிவுகள் மதியம் 1 மணியளவிலும் ஆன்லைனில் வெளியிடப்படும்.
தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“