Advertisment

இனி திருப்பதி செல்ல காத்திருக்க வேண்டாம்- பக்தர்களுக்காக தமிழக அரசு வழங்கும் ஒருநாள் சுற்றுலா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்ய முடியும். அதோடு அனைவருக்கும் தலா ஒரு திருப்பதி லட்டு வழங்கப்படுகின்றது.

author-image
WebDesk
New Update
tirupati

Tirumala Tirupati

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் தினசரி திருப்பதி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதன் விவரம்;

திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்தில் இருந்து தினசரி அதிகாலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கிறது.

மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு (சங்கீதா ஓட்டல் அருகில்), திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். அவர் பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். திருப்பதி கோயிலில் சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை விரைவாக செலுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்குவார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்ய முடியும். அதோடு அனைவருக்கும் தலா ஒரு திருப்பதி லட்டு வழங்கப்படுகின்றது.

காலை, மதிய, இரவு உணவு

சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது. கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது.

திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டு சேர்ப்பதுடன் திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.

செலவு

இந்த திட்டத்தில் ஒரே நாளில் திருப்பதி சென்று தரிசனம் செய்துவர ஒரு நபருக்கு ரூ. 2,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது பேருந்து செலவு, சிறப்பு தரிசனம், உணவு, தண்ணீர் அனைத்தையும் உள்ளடக்கியது.

முன்பதிவு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.

சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment