2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பதி செல்வோருக்கான தரிசன டிக்கெ் முன்பதிவு தொடர்பான தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி கோவில், நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதியில், காணிக்கையாக சொத்துக்ளை எழுதி வைப்பது என பலரும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அதே சமயம் திருப்பதி செல்ல வேண்டும் என்றால் தரிசனம் பார்க்க 3 மாதத்திற்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய அனைத்து டிக்கெட்டுகளும், முன்பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முன்பதிவு முடிந்துவிட்டது.
இதனிடையே தற்போது ஜனவரி மாதத்தில் தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 19-ந் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21-ந் தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்த முன்பதிவில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்கள், அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23-ந் தேதி மதியம் 12 மணி வரை பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம். அதேபோல் அக்டோபர் 22-ந் தேதி காலை 10 மணிக்கு, ஜனவரி மாதம் திருப்பதியில் நடைபெறும், உற்சவம் ஊஞ்சல் சேவை, அர்ஜித் பிரமேற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல், தரிசனம் செய்யும் மெய்நிகர் சேவைக்கு, அக்டோபர் 22-ந் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடியாளர்களுக்கான வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மற்றும் அறைகள், முன்பதிவு டிக்கெட்டுகள் அக்டோபர் 23-ந் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 23-ந் தேதி அங்கப்பிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள், அக்டோபர் 23-ந், தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட்டுகளும் அக்டோபர் 23-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி மாதம், சிறப்பு தரிசனம் செய்ய, அக்டோபர் 24-ந் தேதி, காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.