தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் பார்ப்பதற்றாக ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி கோவில், நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதியில், காணிக்கையாக சொத்துக்ளை எழுதி வைப்பது என பலரும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அதே சமயம் திருப்பதி செல்ல வேண்டும் என்றால் தரிசனம் பார்க்க 3 மாதத்திற்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதில் வி.ஐ.பி தரிசனம், சாதாரண தரிசனம் என பலவகை தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வி.ஐ.பிகளுக்காக ஒரு நிமிடத்தில் தரிசனம் பார்க்கும் வகையிலான டிக்கெட்டுகளை பெற ஸ்ரீவாணி டிக்கெட் மையம் புதிதான தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய டிக்கெட் மையத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்த நிலையல், ரூ10,000 நன்கொடை வழங்கினால் ஒரு பக்தருக்கு விஐபி டிக்கெட் வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் விவரம் பெற்றுக் கொண்டு டிக்கெட்டை அதிகாரிகள் வழங்குவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் விஐபி தரிசன டிக்கெட் பெற கோயிலுக்கு ரூபாய் 10000 நன்கொடை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் ஒரு நபருக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்பது தான் திருமலையில் உள்ள நடைமுறையாக உள்ளது. அதேபோல் நடந்து சென்றால், தரிசனம் பார்க்க வெகு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் பக்தர்கள் பலரும், ரூ300 டிக்கெட் பெற்று தரிசனம் பார்க்க விரும்புகின்றனர். ஆனால் இந்த நடைமுறை அவ்வளவு எளிதல்ல.
ரூ300 டிக்கெட் வாங்கி தரிசனம் பார்க்க வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். திருப்பதி சென்றுவந்தால் திருப்பம் ஏற்படும் என்று ஐதீகம் இருப்பதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதில் வி.ஐ.பி டிக்கெட்டில் பலர் தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“