திருப்பதி கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்களை, நாளைய தினம் (நவ 23) திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
இதேபோல், நீண்ட நாள்களாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வரும் பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் நாளை (நவ 23) மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.
மேலும், பிப்ரவரி மாதத்தின் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கான ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட்டுகள் வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. மற்றொரு புறம், திருமலை மற்றும் திருப்பதியில் பிப்ரவரி மாதத்துக்கான அறை ஒதுக்கீடு வரும் 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரங்களை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக பக்தர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“