திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகம் புகழ்பெற்ற கோயிலாகும். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம், கட்டண தரிசனம் என 2 முறைகளில் மக்கள் தரிசன டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி நிகழ்வு அங்கு பிரபலமானது. இதையொட்டி மக்கள் தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் பிரவேசத்திற்காக 9 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அந்த நாட்களில் ஏழுமலையான வழிபட தேவையான இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி மலையில் ஒரு இடம் மற்றும் திருப்பதியில் எட்டு இடம் ஆக மொத்தம் மொத்தம் ஒன்பது இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“