மண்சட்டியில் படைக்கப்படும் நைவேத்தியம்... பக்தருக்கு வழங்கப்படும் கவுரவம்; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் நெகிழ்ச்சி செயல்!

பக்தரை கவுரவிக்கும் விதமாக திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படும் நெகிழ்ச்சி நிகழ்வு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பக்தரை கவுரவிக்கும் விதமாக திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படும் நெகிழ்ச்சி நிகழ்வு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
tirupathi

மண்சட்டியில் படைக்கப்படும் நைவேத்தியம்... பக்தருக்கு வழங்கப்படும் கவுரவம்; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் நெகிழ்ச்சி செயல்!

பக்தரை கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது. 17- ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. 108 திவ்ய தேசங்களிலும் பெருமாள் வழிபாடு சிறப்பாக நடைபெறவுள்ளது. மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். அதுவும்  அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்க்கை கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. 

Advertisment

பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன.  புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள்கிடைக்கும். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. 

இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பீமன் என்ற மண்பாண்ட தொழிலாளி வசித்துவந்தார். பெருமாள் பக்தரான இவர், ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று தெரியாது. 

Advertisment
Advertisements

"பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லவிட்டு வந்துவிடுவார். ஒருமுறை, “பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?” என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையை செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீதமிருக்கும் மண்ணை சிறுசிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர்.  அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். 

ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த தொழிலாளியின் இல்லத்திற்கு சென்ற அரசர்;அவருக்கு வேண்டிய பொருளுதவி செய்தார். ஆனால் அதை ஏற்காமல், பெருமாள் பணியை செய்துவந்த அவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன் காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: