திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து காத்திருந்து திரிசனம் செய்கின்றனர்.
அதே நேரம் திருப்பதியில் தினமும் பல்வேறு சேவைகள், வேண்டுதல்களும் செய்யப்படுகிறது. இதற்கு பக்தர்கள் 3 மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் திருப்பதியில் அங்கப்பிரதட்சிணம் செய்ய வேண்டுதல் இருந்தால் அதற்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் கோயில் சென்று அங்கப்பிரதட்சிணம் செய்து வேண்டுதல் நிறைவேற்ற முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் அங்கப்பிரதட்சிணம் செய்ய
உள்ளோர் இன்று (செப்.23) முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“