/indian-express-tamil/media/media_files/IoEcDklxh5dgtTXEcZyh.jpg)
Tirumala Tirupati Devasthanams
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று (ஜன.18) தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 தரிசன டிக்கெட், ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது,
ஜன.24 ஆம் தேதி வரை ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. வழிபாட்டு, கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம்.
பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.