tirupati bus booking : ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நாளுக்கு நாள் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தேவஸ்தான போர்டு பதர்களுக்கு எந்தவித சிக்கலும் சிரமமும் ஏற்படாத வகையில் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. தங்கும் விடுதிகள் தொடங்கி சிறப்பு தரிசனம் வரை திருப்பதியில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பை விட ஏழுமலையானை தரிசிப்பது மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பஸ் மூலம் திருப்பதிக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் இப்போது மட்டுமில்லை எப்போதுமே எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாத வகையில் எந்த நேரத்தில் பஸ்சில் செல்ல வேண்டும், எப்படி புக் செய்ய வேண்டும், சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம் அனைத்தும் இங்கே பகிர்ந்துள்ளோம். முடிந்த வரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
tirupati bus booking : திருப்பதி செல்லும் பஸ்கள்
1. திருப்பதி செல்ல மாதவரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துதான் ஆந்திர பஸ்களில் பயணிக்க முடியும்.
2. கீழ்த் திருப்பதியில் இறங்காமல் நேராகத் திருமலைக்கே செல்லும் பக்தர்கள், ஆந்திர பஸ்களில் மட்டுமே பயணிக்க முடியும். ஏனென்றால், பிற மாநிலப் பேருந்துகளுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதி கிடையாது.
3. விசேஷ நாட்களில் மட்டும் மாதவரத்திலிருந்து ஆந்திர பஸ்கள் புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து செல்லும் பக்தர்கள், மாதவரம் பஸ் ஸ்டாண்டு வந்துவிட்டால் அங்கிருந்து திருப்பதி செல்வது சுலபம்.
பக்தர்களின் கவலை தீர்ந்தது... திருப்பதி செல்லபவர்கள் தங்க அனைத்து வசதிகளும் கொண்ட விடுதி வந்தாச்சி!
4. ரயில் விவரம்: திருப்பதியிலேருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்ட்ரல் வந்த சப்தகிரி ரயில், இப்போ 6 மணிக்கு புறப்படுகிறது.
5. திருப்பதி செல்ல இரவு நேர பஸ் பயணம் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது.