tirupati bus : திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதில் தொடங்கி விஐபி டிக்கெட் புக்கிங் வரை ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பக்தர்கள் முழுமையாக தெரிந்துக் கொண்ட பின்பு திருப்பதி செல்ல திட்டமிடுவது மிகவும் அவசியமாக இருந்து வந்தது.
ஆனால் இனிமேல் இந்த புது தகவலையும் பக்தர்கள் தெரிந்துக் கொண்டு செல்வது அதை விட நல்லது. காரணம் திருப்பதி செல்பவர்கள் பலரும் சொந்த வண்டியில் கார், பைக், மூலம் திருப்பதி செல்ல பிளான் போடுவார்கள். ஆனால் இனிமே அதிலும் வந்தது சிக்கல்.
ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, திருப்பதியில் அதன் எதிரொலி இருந்து வருகிறது. இதுவரை தேவஸ்தானம் போர்ட் பின்பற்றி வந்த அனைத்து விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன. விஜபி தரிசனமும் இதில் அடங்கும். இதில் புதியதாக வந்திருக்கும் மற்றொரு விதிமுறை தான் இந்த வாகன தடை.
உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரசத்தி பெற்ற ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
tirupati bus travelling changed
அதிலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இருந்தும் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
சென்னையை எடுத்துக் கொண்டால் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல தினமும் 4 ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தவிர்த்து பெரும்பாலான பக்தர்கள் சொந்த கார்கள், வேன்கள், தனியார் பஸ்களை வாடைக்கு எடுத்து டிரப் போல் திருப்பதி சென்று வருவார்கள். திருப்பதி செல்பவர்களுக்கு தேவஸ்தான போர்டு மின்சாரத்தினால் இயங்கும் வாகன சேவையையும் பயன்பாட்டில் வைத்துள்ளது. இதில் செல்பதற்கு ஆன்லைனில் புக்கிங் வசதியும் இருந்து வந்தது.
திருப்பதி கோயிலுக்கு ரூ 1.11 கோடி காணிக்கை…அதிர வைத்த அம்பானி!
இந்நிலையில் சுற்றுசூழல் பாதுகாப்பு கருதி தேவஸ்தான போர்டு புதிய அறிவிப்பு ஒன்றை பக்தர்களுக்கு வெளியிட்டுள்ளது. திருப்பதி செல்லும் மலைபாதையில் வாகனங்களிலிருந்து, புகை அதிகமாக வெளியேறுவதால் இனிமேல் இந்த பாதைகளில் பழைய வாகனங்களுக்கு அனுமட்தி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. , 2003ம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்களை, திருமலைக்கு செல்ல தடை விதித்து, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் முதல் இந்த புதிய அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.