Tirupati buses from Chennai : சென்னையில் இருந்து திருப்பதி செல்ல புதிய பேருந்து சேவைகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது தமிழக போக்குவரத்து கழகம். ஏற்கனவே சென்னையில் இருந்து திருப்பதி மட்டுமல்லாமல் பல்வேறு ஆந்திர மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
தற்போது தமிழக போக்குவரத்து கழகம் ஏ.சி. பேருந்துகள் 11-ஐ அறிமுகம் செய்துவைத்துள்ளது. இந்த பேருந்துகள் திருப்பதி, காளஹஸ்தி, மற்றும் நெல்லூர் இடங்களுக்கு செல்கிறது. மாதவரம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து திருப்பதி செல்லலாம். 54 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்துகள் நாள் ஒன்றுக்கு 44 ட்ரிப்களை மேற்கொள்கிறது.
தனியார் பேருந்து நிறுவனங்கள் இந்த பயணத்திற்கு ரூ.500 முதல் ரூ. 1000 வரை கட்டணங்களாக வசூலிக்கிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் ரூ. 205 முதல் ரூ. 225 வரை மட்டுமே கட்டணமாக செலுத்துகிறது. ஏ.சி. இல்லாத பேருந்துகளில் வெறும் ரூ.195 மட்டுமே வசூலிக்கப்படுகின்ற நிலையில் இந்த பேருந்துகள் அறிமுகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு 136 பேருந்துகள் ஆந்திராவின் திருப்பதி மற்றும் இதர பாகங்களுக்கு செல்கிறது.
மேலும் புதிதாக 90 பேருந்துகள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் மச்சிலிபட்டினம் மற்றும் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு கருடா என்ற பெயரில் ஆந்திர அரசும் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, திருச்சி, தென்காசி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து சபரிமலை செல்வதற்கு புதிதாக 64 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : கள்ளச்சந்தையில் திருப்பதி லட்டு விற்பனை : தடுக்க தேவஸ்தானம் அதிரடி திட்டம்