Advertisment

அவசர அவசரமாக திருப்பதி செல்லும் பயணமே இனி வேண்டாம்! ஏழுமலையானை தரிசிக்கும் நேரத்தை கூட புக் செய்யலாம்

நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்ற கட்டண விருப்ப விவரங்களை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tirupati balaji temple

tirupati balaji temple

tirupati darshan online ticket booking : இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம் திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று இது. திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Advertisment

இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம் செல்வோர் திருமலையில் உள்ள கோவிலுக்கு நேரில் செல்ல வேண்டும். ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்ற்த்திற்கு பிறகு அதன் பிரதிபலிப்பு திருப்பதியில் தெரிய தொடங்கியது. விஜபி தரிசனம் தொடங்கி பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதில் அனைத்து மாற்றங்களும் நடைமுறக்கு வந்துள்ளன.

இனிமேல் அவசர அவசரமாக குடும்பத்துடன் செல்ல திட்டமிட்டு அடிச்சி பிடித்து ஓடி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. ஆன்லைன் புக்கிங் தொடங்கி தரிசின நேர என அனைத்து ஈஸியான சேவைகள் பற்றி இங்கே உங்களுக்கு பகிர்ந்துள்ளோம். திருப்பதி செல்லும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு முடிந்த வரை பகிருங்கள்.

1. வாக்காளர் அடையாளர் அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வரும் பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கி, டிக்கெட் வழங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. ஆதார் கார்டுகளை கொண்டு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெற திருப்பதி பேருந்து நிலையம் முதல், பக்தர்கலுக்கான ஓய்வறை, ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் டிக்கெட் கௌண்டர்களை திருப்பது கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது.

3. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கௌண்டர்களில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டை காண்பித்து டிக்கெட் பெறலாம். இதன் மூலம் விரைவாக சுவாமி தரிசனம் செய்யலாம்.

4. விஐபி தரிசனம் மூலமாக தினந்தோறும் இரண்டரை மணி நேரம் முதல் 3 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரம் அதிகரித்து வருகிறது. விஐபிகளுக்கு ஒதுக்கக்கூடிய நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியும்.

5. எனவே நீதிபதிகள் மத்திய மாநில அமைச்சர்கள் , எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என சட்ட ரீதியான பதவியில் உள்ள புரோடோகால் விஐபிகளுக்கும், அவர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு என பிரிவினை இல்லாமல் விஐபி டிக்கெட் வழங்கப்படும். மேலும் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ள நேரத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான பதவிக்கு ஏற்ப அவர்களுக்கு உண்டான மரியாதையின் படி சுவாமியின் அருகில் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வைத்து ஆரத்தி தீர்த்தம் ஆகியவை வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் லகு தரிசனம் .

tirupati darshan online ticket booking : ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் விதிமுறைகள்:

ஆன்லைன் டிக்கெட்டுக்கு ஒரு நபருக்கு ரூ .300 செலவாகிறது, அதேசமயம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்கெட் வாங்க தேவையில்லை.

ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது ஒருவர் தங்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் / அல்லது வாக்காளர் ஐடியை வைத்திருக்க வேண்டும்.ஒருவர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது டிஜிட்டல் புகைப்படத்தையும் (photo) பதிவேற்ற வேண்டும்.

உங்களுடன் செல்லக்கூடிய நபர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் முழுப் பெயர்களும் அவர்களின் அடையாள ஆதார ஆவண விவரங்களுடன் தேவை.

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. ஏழுமலையானை தரிசித்து விட்டு 'சிலதோரணம்' செல்லவும் இனி அனுமதி!

நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்ற கட்டண விருப்ப விவரங்களை கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.

டி.டி.டி வலைத்தளத்தைப் பயன்படுத்தி திருமலை தரிசனம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

Tirupati Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment