Tirupati darshan tirupati to chennai tirupati online ticket ttd online room booking -திருப்பதி கோவில், மூத்த குடிமக்கள் திருப்பதி தரிசனம்
Tirupati Darshan: திருப்பதி தரிசனத்தில் மனிதாபிமான நடவடிக்கையாக முதியவர்களுக்கு 2 நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த நாட்களை உரியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisment
இந்தியாவில் பக்தர்கள் பெருமளவில் குவியும் முக்கியத் தலம், திருப்பதி வெங்கடாசலபதி கோவில். இங்கு ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 700 பேர் வீதம் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இதற்கு வயது சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை தேவை. மூத்த குடிமக்களுடன் உதவிக்கு செல்ல ஒரு நபருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அவருக்கும் ஆதார் அடையாள அட்டை தேவை. எனினும் கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் முதியவர்கள் திருப்பதியில் தரிசனம் செய்ய இரு நாட்களை தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. அக்டோபர் 15, 29 ஆகிய இரண்டு தினங்கள்தான் அவை. 65 வயதை கடந்த முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இரு தினங்களும் காலை 10 மணி, மதியம் 2 மணி, மாலை 3 மணி என பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். நாள் ஒன்றுக்கு 4000 பேர் வீதம், இரு நாட்களுக்கு 8000 பேரை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. மேலும் அக்டோபர் 16, 30 ஆகிய தினங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தரிசன வசதியை தேவஸ்தான நிர்வாகம் செய்திருக்கிறது.
இந்த வாய்ப்பை மூத்த குடிமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.