Advertisment

இந்த ஆண்டு 2 வைகுண்ட ஏகாதசி; திருப்பதி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்டுகள்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு 7 லட்சம் டிக்கெட்கள் வழங்க முடிவு; இலவச தரிசன டிக்கெட் எங்கு கிடைக்கும்? ரூ300 ஆன்லைன் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?

author-image
WebDesk
New Update
Tirupati buses from Chennai

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு 7 லட்சம் டிக்கெட்கள் வழங்க முடிவு

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்டுகள் வழங்க உள்ள நிலையில், அவை எப்போது வெளியிடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். ஏகாதசி நாட்களில் சொர்க்க வாசல் பிரவேசம் செய்ய பெருமாள் பக்தர்கள் விரும்புவர். அந்த வகையில் இந்த ஆண்டு இரு முறை வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. முதல் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி ஜனவரி 2 ஆம் தேதி நடந்தது. அடுத்த வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 23 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், வைகுண்ட ஏகாதசிக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும் இலவச தரிசனமும் மூலம் 50,000 பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்படும்.

இந்த 10 நாட்களுக்கும் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். அதேபோல் ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சம் வழங்கப்படும். இலவச தரிசன டிக்கெட்டுகள் 5 லட்சம் மற்றும் ரூ300 சிறப்பு தரிசன டிக்கெட் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன்களை பெற விரும்பும் பக்தர்கள் கவுண்டர்களுக்கு நேரடியாக வந்து தங்களுடைய ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து அவற்றைப் பெறலாம்.

அதைத் தொடர்ந்து இந்த மாதம் 29 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்படும். அதைத் தொடர்ந்து கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment