By: WebDesk
Updated: September 30, 2019, 12:54:04 PM
tirupati devasthanam booking
tirupati devasthanam booking : ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா. நேற்றுரவு அங்குரார்ப்பணத்துடன் விழா களைக்கட்ட தொடங்கியது. இன்று மாலை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 14 வாகனங்களில் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய அம்சமான கருட சேவை வரும் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த பிரம்மோற்சவ விழாவில் கலந்துக் கொண்டு ஏழுமலையாணை தரிச்க்க உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து திருப்பதியில் குவிவார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் லட்சணக்கான பக்தர்கள் குடும்பங்களுடன் இந்த சிறப்பு விழாவில் கலந்துக் கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள். அந்த வகையில் திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்காக திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தான் இந்த சிறப்பு செய்தி.
tirupati devasthanam booking : பிரம்மோற்சவ விழாவிற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்னென்ன? சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் விபரம், வழிபடும் நேரம் என்ன? போன்ற பல்வேறு தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.
பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம்:
இன்றிரவு தொடங்குகிறது. திங்கட்கிழமை மாலை அதிகாலை 3 மணி, காலை 6 மணியில் இருந்து 10 மணி, காலை 10.45 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைன் சேவை:
ஆன்லைன் மூலம் https://ttdsevaonline.com இணையதளத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு புக்கிங் செய்தும் சாமியை தரிசிக்கலாம்.இது தவிர சர்வ தரிசன சேவை என இலவச தரிசனமும் உள்ளது. அடையாள அட்டையாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு என ஏதாவது ஒரு அடையாள அட்டைகளை திருப்பதிக்கு கொண்டு செல்வது அவசியம்.
பிரம்மோற்சவ விழா நாட்களில் விஐபி தரிசனம் உள்ளிட்ட அனைத்து முன்னுரிமைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. திருமலையிலும் திருப்பதியிலும் தங்குவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்
ரயில் சேவை:
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.அரக்கோணத்தில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (15601) புறப்பட்டு, அதேநாளில் மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும் . இது திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புட்லூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பிரமோற்சவம் முடியும் வரை, தமிழக அரசு, 150 பஸ்களையும், ஆந்திர அரசு, 150 பஸ்களையும் இயக்குகின்றன. இவற்றுக்கான முன்பதிவை, வழக்கமான முன்பதிவு மையங்களில் செய்து கொள்ளலாம்.