திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு மாத காலம் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 1) மீண்டும் தெப்பக்குளம் திறக்கப்பட்டது.
2/5
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். இதனால் பராமரிப்பு பணிகள் முடியும் வரை தெப்பக்குளம் மூடப்படும்.
3/5
இந்த ஆண்டு தூய்மைப் பணி மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த மாதம் 1 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் (சுவாமி புஷ்கரணி) மூடப்பட்டது. மேலும், தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
Advertisment
4/5
புஷ்கரணியில் உள்ள தண்ணீர் மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டது. சேறுகள் அகற்றப்பட்டு, குப்பைகள் வெளியேற்றப்பட்டன. படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தளம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
5/5
ஒரு மாத காலம் நடைபெற்ற தெப்பக்குள பராமரிப்பு பணிகள் நேற்றுடன் (31.08.2024) நிறைவடைந்தன. இதையடுத்து இன்று முதல் (01.09.2024) தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.