திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தை சிலர் போலியான செயலி உருவாக்கி பயன்படுத்திவருவதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி ttdevasthanams.ap.gov.in என மாற்றப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கோவில்களின் சேவைகள், தரிசன டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கும்.
மேலும் பக்தர்கள் இனிமேல் இந்த இணையதளத்தில்தான் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் வெளியிட்டவுடன் பலர் திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரியை போலியாக பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
இதனால் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் கூடுதல் டிக்கெட்டுகள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
முன்னதாக, புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானம், "https://tirupatibalaji-ap-gov.org/" என்ற போலி இணையதளத்திற்கு எதிராக பொதுமக்களை எச்சரித்தது.
திருமலை-திருப்பதி யாத்ரீகர்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட 41வது போலி இணையதளம் இதுவாகும். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இணையதளம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன முன்பதிவுகள் மற்றும் பிற கோயில் புதுப்பிப்புகள் போன்ற சேவைகளை வழங்கியது.
இதுகுறித்த தகவல்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு தெரியவந்தன. இதையடுத்து, திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் IPC பிரிவுகள் 420, 468, 471 இன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“