திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி கடந்த 10-ம் தேதி முதல் நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏகாதசி நிகழ்வு நாளை உடன் நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இலவச தரிசனத்தற்கும் டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நாளையுடன் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் முடிவடைகிறது. இதையடுத்து நாளை ஜன.20 முதல் டோக்கன் இன்றி இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதாவது ஜனவரி 20-ம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு எஸ்.எஸ்.டி டோக்கன்கள் விநியோகம் செய்யப்படாது. அன்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன வரிசையில் மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
ஜனவரி 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு வரிசையில் மட்டுமே வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.