செரிமான பிரச்சனை முதல் இருதய கோளாறு வரை; கலப்பட நெய்யால் ஏற்படும் பாதிப்புகள்

கலப்படம் செய்யப்பட்ட நெய்யை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, செரிமான பிரச்சனை முதல் இருதய கோளாறு வரை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்படம் செய்யப்பட்ட நெய்யை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, செரிமான பிரச்சனை முதல் இருதய கோளாறு வரை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ghee issue

பல வீடுகளில் நெய்யை முதன்மையான பொருளாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, அதன் செழுமையான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் மாட்டின் கொழுப்பு கலக்கப்படுவதாக தகவல்கள் பரவி பின்னர், மக்கள் இடையே கலக்கம் நிலவுகிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: How eating adulterated ghee affects health

Advertisment

கலப்படம் செய்யப்பட்ட நெய்யை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என மருத்துவர் ராகேஷ் குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். லாபத்தை அதிகரிப்பதற்காக மலிவான பொருள்களை நெய்யில் கலப்பதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.

பாமாயில் போன்ற விலை குறைந்த எண்ணெய்கள், உண்ண முடியாத வகையில் இருக்கும் விலங்குகளின் கொழுப்புகள், பாரஃபின் மெழுகு மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மூலம் நெய்யில் கலப்படம் செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இது போன்ற கலப்பட நெய்யை உணவுக்கு பயன்படுத்துவதால் சிறுநீரக கோளாறு, நரம்பியல் கோளாறு போன்றவை ஏற்படும் அபாயமும் இருப்பதாக மருத்துவர் நிஷாந்த் சிங் விவரித்துள்ளார்.

கலப்பட நெய்யை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்?

செரிமான பிரச்சனைகள்: கலப்பட நெய்யை உட்கொள்வது முதலில் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisment
Advertisements

நச்சுத்தன்மை வெளிப்பாடு: பாரஃபின் மெழுகு போன்ற இரசாயனங்கள் கலந்த நெய்யை எடுத்துக் கொண்டால், உடலில் நச்சுத் தன்மையை வெளிப்படுத்தும். இவை செரிமான மண்டலத்தில் எரிச்சலை ஏற்படுத்தி, நீண்ட நாள் உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

ஒவ்வாமை: சில சமயங்களில் இவை சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். இதேபோல், கடுமையான சுவாச பிரச்சனைகளை உருவாக்கும். இவை மட்டுமின்றி கல்லீரல் பாதிப்பு, இருதய பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். 

கலப்பட நெய்யை கண்டறியும் முறை:

கலப்படம் செய்யப்பட்ட நெய் பார்ப்பதற்கு கிரீஸ் அல்லது மெழுகு போல காட்சியளிக்கும். மேலும், இயற்கையான நெய்யில் நல்ல நறுமணம் வீசும். இதன் மனம் சற்று கடினமாக இருந்தால், அது கலப்பட நெய் எனக் கண்டறிந்து விடலாம். சுத்தமான நெய் தங்க நிறத்தில் இருக்கும். இந்த நிறத்தில் இருந்து மாறுபட்டால் கவனமாக இருக்க வேண்டும். FSSAI சான்று பெற்ற நல்ல நிறுவனத்தின் நெய்யை வாங்கி பயன்படுத்தலாம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Effects of consuming ghee daily Ghee and its beauty benefits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: