திருப்பதி தரிசனம்: இவ்வளவு மலிவான கட்டணத்தில் சொகுசான பயணமா?
Chennai to Tirupati: ஏ.சி. பஸ்களில் கூடுதலாக 15 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையே வசூலிக்கப்படுவதால், இந்த புதிய ஏ.சி. பஸ்களுக்கு பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.
Tirupati News In Tamil: திருப்பதி செல்லும் பக்தர்கள் போக்குவரத்து வசதிக்காக திண்டாட வேண்டாம். மலிவுக் கட்டணத்தில் தமிழக அரசு போக்குவரத்து வசதிகளை தருகிறது. புதிதாக இயக்கப்படும் ஏ.சி. பஸ்களில், தனியார் பஸ்களை விட கட்டணம் குறைவு. இது தொடர்பான முழு தகவல்களை அறிய தொடருங்கள்!
Advertisment
திருப்பதி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் இதர நகரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினமும் 136 ட்ரிப்புகள் ஏ.சி. அல்லாத பஸ்களை இயக்குகிறது. இந்த நிலையில் அண்மையில் புதிதாக 11 ஏ.சி. பஸ்களை இயக்குகிறது தமிழ்நாடு அரசு.
Tirupati News: திருப்பதி டூ சென்னை பஸ்
புதிய 11 ஏ.சி. பஸ்களும் சென்னை கோயம்பேடு மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களில் இருந்து திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக மேலும் 44 ட்ரிப்கள் ஆந்திராவுக்கு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
இதில் விசேஷம் என்னவென்றால், சென்னையில் இருந்து திருப்பதிக்கு தனியார் பஸ்களில் சூழலுக்கு ஏற்ப ரூ 500 முதல் 1000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் தமிழக அரசு ஏ.சி. பஸ்களின் கட்டணம் ரூ 205 முதல் 225 வரை மட்டுமே! ஆந்திர அரசின் வால்வோ பஸ்கள் சென்னை டூ திருப்பதிக்கு 260 ரூபாய் கட்டணம் வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஏ.சி. அல்லாத பஸ்களில் 190 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. பஸ்களில் கூடுதலாக 15 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையே வசூலிக்கப்படுவதால், இந்த புதிய ஏ.சி. பஸ்களுக்கு பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.