Tirupati News: திருப்பதி விஐபி தர்ஷனுக்கு ‘ஆப்’ வந்தாச்சு! திருப்பதி ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தொகையை செலுத்தும் விதமாக மேற்படி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் பணம் செலுத்தலாம். எனவே பக்தர்கள் தரிசன டிக்கெட்டுக்காக அலைபாயாமல், ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisment
இந்தியாவில் பக்தர்கள் அலைமோதும் கோவில்களில், திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் முக்கியமானது. இங்கு தரிசனத்திற்காக பக்தர்கள் நாட்கணக்கில் காத்துக் கிடப்பதும் உண்டு. விஐபி-க்கள் உரிய தொகையை செலுத்தி, விஐபி தரிசன வழிமுறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருப்பதி கோவில் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்ட ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ரூ 10000 நன்கொடை செலுத்துகிறவர்களுக்கு விஐபி தரிசன வசதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக கோவில் அறக்கட்டளைக்கு நிதி குவிவதுடன், விஐபி தரிசனமும் ஒழுங்கு படுத்தப்படுகிறது.
தற்போது ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன் லைனில் நிதி அளிக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ‘ஆப்’பில் பத்தாயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, ரூ 500-க்கு விஐபி தரிசன டிக்கெட் பெறலாம். ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ஆன்லைனில் பணம் செலுத்த, கடந்த 21-ம் தேதி முதல் வசதி செய்யப்பட்டது. இந்த வகையில் 1109 பேர் பதிவு செய்திருப்பதாக கோவில் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
விஐபி தரிசன டிக்கெட்டுக்காக இனி அங்கு இங்கு அலையவேண்டாம். ஆன்லைனில் கச்சிதமாக முடித்துவிடலாம்.