திருமலை திருப்பதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
1983 முதல் தொடர்ந்து 41 வருடங்களாக இந்த சேவை தொடரப்படுகிறது. இது உலகிலேயே எங்கும் இல்லாத வகையில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் திட்டமாக மாறியுள்ளது.
இதற்கான பொருட்கள் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் அன்னபிரசாதத்தின் தரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக வந்ததேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ், அன்னதானத்தை ஆய்வு செய்து, அதன் தரத்தை மேம்படுத்த வேண்டுமென விரும்பினார்.
இதற்காக தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்களின் ஆலோசனைப்படி சுவை, தரத்தை உயர்த்தவும், அதிநவீன கருவிகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சியாமள ராவ் கூறுகையில், ‘‘ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேருக்கு 3 வேளையும்சமையல் செய்து பரிமாறுவது என்பது சுலபமான காரியம் அல்ல.த ற்போது திருமலையில் சுவையான உணவே வழங்கப்படுகிறது.
இருப்பினும், ஒரே மாதிரியாக இல்லாமல் புதிய சுவையுடன் தரமாக வழங்கினால் நல்லது. பழைய சமையல் பாத்திரங்களை மாற்றி நவீன சமையல் கருவி களும் வாங்கப்பட உள்ளது. இதனால், விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு மேலும் சுவையான அன்னதானம் கிடைக்கும்’’ என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“