Advertisment

திருப்பதி போகாமலே வெங்கடேச பெருமாள் லட்டு சாப்பிட ஆசையா? இனி இந்த ஊர்களிலும் கிடைக்கும்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் பரவலாக கிடைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆந்திரா மாநிலங்களில் உள்ள கோயில்களிலும் லட்டு பிரசாதம் இனி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
tirupati

ருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ், லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் பரவலாக கிடைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆந்திரா மாநிலங்களில் உள்ள கோயில்களிலும் லட்டு பிரசாதம் இனி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த கர்நாடகா மாநிலம் கூட்டுறவு சங்கம் தயாரிக்கும் நந்தினி நெய்யை உபயோகிப்பது என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. 

Advertisment

திருப்பதி என்றாலே வெங்கடேச பெருமாள் கோயிலும் அங்கே வழங்கப்படும் லட்டு பிரசாதமும்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் ஒரு நபருக்கு 175 கிராம் எடை கொண்ட லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு கூடுதலாக லட்டு வேண்டும் என்றால் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். லட்டு வாங்குவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. இந்த லட்டு ஏழுமலையான் கோயிலில் 3 வகைகளில் தயார் செய்யப்படுகிறது. 

முதல் லட்டு பக்தர்களுக்கு கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் லட்டு. இரண்டாவது லட்டு 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு. மூன்றாவது லட்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காகவே தயார் செய்யப்படுகிறது.  இதில், 175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகிய பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான நெய் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

திருப்பதியில் வழங்கப்படும் லட்டு தரமும், சுவையும் குறைந்துள்ளதாக பக்தர்கள் புகார்கள் எழுந்ததை அடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் வழங்கும் நெய்யில்தான் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் பெற்றிருந்தது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய் வழங்கியுள்ளது. அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றது என திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தரமற்ற நெய்யை விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறு டெண்டர் விடப்பட்டதில் கர்நாடகா மாநில கூட்டுறவு சங்கம் டெண்டரில் பங்கேற்று தரமான நெய்யை வழங்குவோம் என உத்தரவாதம் அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த நெய் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. செப்டம்பர் 5-ம் தேதி டேங்கர் லாரி மூலம் நந்தினி நெய் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெட்டிங் துறைக்கு வரவழைக்கப்பட்டது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறுகையில், லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நெய்யின் தரத்தை உயர்த்த வேண்டும் என அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் டெண்டர் கோரப்பட்டது.

இதில் கர்நாடகா மாநில கூட்டுறவு சங்கத்தின் நந்தினி நெய்யை உபயோகிப்பது என முடிவு செய்யப்பட்டது. பக்தர்களும் லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் அது பரவலாக கிடைக்க வழி வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே,  சென்னை, வேலூர், பெங்களூர் தகவல் மையங்களில் மட்டுமே கிடைத்து வந்த லட்டு பிரசாதம் இனி ஆந்திர மாநிலம் ரம்ப சோவரம், ஒண்டிமிட்டா, பித்தாபுரம், விசாகப்பட்டினம் , விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் 75 ஆயிரம் லட்டு பிரசாதங்கள் திருப்பதியில் உள்ள கபிலதீர்த்தம் சிவன் கோயில், ஸ்ரீனிவாச மங்காபுரம், அப்பலைய்ய குண்டா ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது” என்று சியாமளா ராவ் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirupati Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment