திருமலை திருப்பதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அன்னதானம் வழங்குவது, உணவு, தண்ணீர் எனப் பல்வேறு ஏற்பாடுகளை செய்கிறது.
அதே நேரம் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய டிக்கெட் வழங்கப்படும். பலர் இந்த டிக்கெட்களை ஆன்லையில் முன்பதிவு செய்கின்றனர்.
சிலர் நேரில் சென்று டிக்கெட் பெறுகிறார்கள். பெரும்பாலான டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்படும் நிலையில், கணிசமான டிக்கெட் நேரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், புதிதாக வந்துள்ள தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பக்தர்களின் தேவைக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், நேரில் டிக்கெட் பெறுபவர்கள் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். தற்போது கோகுலம் ஓய்வறையில் மட்டும் டிக்கெட் வழங்கப்படும் நிலையில் புதிதாக திருமலையில் உள்ள ஆதிசேஷு ஓய்வறையிலும் டிக்கெட் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
மொத்தம் 1000 டிக்கெட்டுகளில் 750 டிக்கெடுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நிலையில், மீதமுள்ள 250 டிக்கெட்டுகள் மட்டுமே நேரடியாக திருமலையில் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“