திருப்பதி திருமலை தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக புதிய வாட்ஸ்அப் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு, தங்கும் வசதி மற்றும் கோயில் செயல்பாடுகள் குறித்த நிகழ்நேர தகவல்களை பக்தர்கள் எளிதாகப் பெற முடியும்.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க உலகம் முழுவது இருந்து பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்டானம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் (டி.டி.டி), பக்தர்களின் வசதிக்காக புதிய வாட்ஸ்அப் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மொத்தம் 15 முக்கிய சேவைகள் வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு, தங்கும் வசதி மற்றும் கோயில் செயல்பாடுகள் குறித்த நிகழ்நேர தகவல்களை பக்தர்கள் எளிதாகப் பெற முடியும்.
இதனால் பக்தர்கள் எளிதாக தங்களது தேவைகளை நிர்வகிக்க முடியும். நேரம் மிச்சப்படும், காத்திருப்பு நேரம் குறையும், மேலும் பயண அனுபவம் சிறப்பாக அமையும்.
வாட்ஸ்அப்பில் TTD சேவைகளை பெறும் முறை:
முதலில் 9552300009 என்ற எண்ணை உங்கள் போனில் சேவ் செய்யுக்கள். இது ஆந்திரப்பிரதேச அரசு குடிமக்கள் உதவிக்கான ஹெல்ப்லைன் எண்.
வாட்ஸ்அப்பை திறந்து, அந்த எண்ணுக்கு “hi” என மெசேஜ் அனுப்புங்கள்.
அதற்குப் பதிலாக வரும் செய்தி:
"Welcome to Andhra Pradesh Government Citizen Helper Service. Your convenience is our priority. Please select the civil service you require." என்ற செய்தி வரும்.
இதையடுத்து, “Select Services” என்பதைத் தேர்வு செய்து TTD சேவைகள் என்பதைத் தெரிவுசெய்யலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாட்ஸ் அப் மூலம் அறிமுகப்படுத்தியுள்ள பிற சேவைகள்:
சர்வதரிசன டோக்கன்கள்
சர்வதரிசன நேரடி நிலை – வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸ்-2 இல் காத்திருப்பு நிலை
ஸ்ரீவாணி அறக்கட்டளை நிலை – ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் தற்போதைய நிலை
முன்பணம் மீளுதல் நிலை – ரூம் முன்பதிவுக்காக செலுத்திய முற்றுப்பணத் திருப்பிச் செலுத்தும் நிலை
TTD இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில், நன்கொடை தொடர்பான தகவல்களும், கூடுதல் கோவில் சேவைகளும் சேர்க்கப்படும்.
இந்த முயற்சி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.
இது, அரசின் மின்னணு நிர்வாக (e-Governance) நோக்கத்துக்கிணங்கிய புதிய பராமரிப்பு முயற்சியாகும், இது ஏற்கனவே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற பொதுச் சேவைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.