tirupati temple timings : ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பிரசத்தி பெற்ற ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், வரும் நாட்களில் குடும்பத்துடன் திருப்பதி செல்ல திட்டமிட்டிருப்பவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காக முக்கிய தகவல். விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்த அறிவிப்பு இன்றுடன் (15. 6.19) முடிவடைகிறது. எனவே இனிமேல் இலவச வரிசையில் செல்பவர்களுக்கு சிக்கல் அதிகம். நீங்கள் சாமியை சென்று தரிசிக்க கூடுதல் நேரம் எடுக்கும்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க : திருப்பதியில் 2 மணி நேரத்தில் இலவச தரிசனம்! புதிய திட்டம் அறிமுகம்!!!
இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகத்தினர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ” ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை விஜபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது “ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த காலகெடு முடிவடைவதால் நாளை முதல் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிகம் சிரமம் மற்றும் கூடுதல் நேரம் எடுக்கக்கூடும். எனவே, திருப்பதி செல்பவர்கள் தெளிவாக திட்டமிட்டு செல்வது நல்லது. 10 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதி செய்வது நல்லது.
ஆட்சி மாறினாலும் பதவி ஆசை போகவில்லை : திருப்பதி தேவஸ்தான போர்டு பதவியை ராஜினாமா செய்யாத அதிகாரிகளால் பரபரப்பு
திருப்பதியில் உடல் ஊனமுற்றோர் மற்றும் பார்வையற்றோருக்காக செல்வதற்காக 2 சிறப்பு வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.