Tirupati Tirumala darshan ticket : திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதில் தொடங்கி விஐபி டிக்கெட் புக்கிங் வரை ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பக்தர்கள் முழுமையாக தெரிந்துக் கொண்ட பின்பு திருப்பதி செல்ல திட்டமிடுவது மிகவும் அவசியமாக உள்ளது.
ஆந்திராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, திருப்பதியில் அதன் எதிரொலி இருந்து வருகிறது. இதுவரை தேவஸ்தானம் போர்ட் பின்பற்றி வந்த அனைத்து விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன. விஜபி தரிசனமும் இதில் அடங்கும்.
பக்தர்களின் வருகையே முக்கியம் அனைத்து பக்தர்களுக்கு தரிசனம் கிட்ட வேண்டும் என்பதற்காக இந்த புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. திருப்பதியில் கடந்த 18ஆம் தேதி முதல் எல்1, எல்2, எல் 3 என்று மூன்று வகையான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்பட்டது. மூலவர் சன்னதியின் அருகே வழங்கப்பட்டு வந்த தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம் ஆகியவை மூலவர் சந்நிதிக்கு வெளியே வழங்கப்படுவதால் தற்போழுது விஐபி தரிசனத்திற்கான நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம்.. விஜபி தரிசனம் பெறுவதும் சுலபம்.
மின்சார வாகன சேவை:
உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரசத்தி பெற்ற ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
அதிலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இருந்தும் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
சென்னையை எடுத்துக் கொண்டால் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல தினமும் 4 ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றனர்
திருப்பதி செல்பவர்களுக்கு தேவஸ்தான போர்டு மின்சாரத்தினால் இயங்கும் வாகன சேவையையும் பயன்பாட்டில் வைத்துள்ளது. இதில் செல்பதற்கு ஆன்லைனில் புக்கிங் வசதியும் இருந்து வந்தது,. இனிமேல், அந்த ஆன்லைன் புக்கிங் வசதியும் தேவஸ்தான போர்டுக்கு கீழே வருகிறது. எனவே, இனிமேல் இந்த வசதியை பயன்படுத்த நினைக்கு பக்தர்கள் ஆன்லைன் புக்கிங் செய்யும் போது அதனை தேவஸ்தான நிர்வாகிகள் கவனிப்பார்கள். ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.