Advertisment

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. ஏழுமலையானை தரிசித்து விட்டு 'சிலதோரணம்' செல்லவும் இனி அனுமதி!

திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tirupati darshan booking online

tirupati darshan booking online

tirupati to chennai : ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Advertisment

குடும்பத்துடன் திருப்பதி செல்பவர்கள் ஏழுமலையாணை தரிசனம் செய்து விட்டு, இந்த இடங்களையெல்லாம் சுற்றி பார்த்தால் பலன் கிட்டும் என்ற பேச்சும் ஒருபுறம் இருக்கிறது. திருப்பதி செல்ல திட்டமிட்டுருபவர்கள் அல்லது இத்தனை முறை திருப்பது சென்று வந்து இந்த இடங்களையெல்லா, மிஸ் செய்தவர்களாக நீங்கள்? உங்களுக்கு தான் இந்த சிறப்பு பகிர்வு.

tirupati temple : திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள்!

1.பாதாள மண்டபம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் தலயேரு குண்டு என்கிற பெரியபாறையைக் காணலாம். இந்தப் பாறையின் மீது பக்த ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட் டுள்ளது. மலை ஏறுவோரும் இறங்குபவர்களும் தலைவலி அல்லது கால்வலி வராமல் இருக்க, தங்களின் தலையை இப்பாறையின் மீது தேய்ப்பார்கள். அந்த அடையாளம் சிலையில் தென்படுகிறது.

2.ஏழுமலையான் தரிசனம் முடிந்து வெளிவரும்போது மண்டபங்கள், கோயில்கள், சம்பங்கி பிரதட்சிணம், கிருஷ்ண தேவராயர் மண்டபம், திருமலை ராயர் மண்டபம், அயினா மஹால், துவஜஸ்தம்ப மண்டபம், ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில், ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி, ஸ்ரீ நரசிம்மசுவாமி சந்நிதி, ஸ்ரீ கருட சந்நிதி, ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சந்நிதி.

3. திருமலையில் திருப்பதி ஆலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள ‘சிலாதோரணம்’ என்ற பாறை உள்ளது இது சுமார் 250 கோடி வருடங்கள் பழமையானது என கூறப்படுகிறது. இரு பெரிய பாறைகள் முத்தமிட்டுக் கொள்வது போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது. இதுவரை இந்த இடத்திற்கு செல்ல சில காலம் தடை விதிக்கப்ப்ட்டிருந்தது. ஆனால் இனிமேல் நீங்கள் தாரளமாக செல்லலாம்.

சொந்த வாகனத்தில் குடும்பத்துடன் திருப்பதி செல்ல பிளான் செய்து இருக்கிறீர்களா? இனிமேல் அப்படி செல்வது கஷ்டம் தான்

4. திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது. 'த்ரோவ்வ' என்றால் நடந்து போகும் வழி எனப் பொருள். நடந்து போகும் வழியில் உள்ள பாஷ்யகாரர் ஸந்நிதி இது

Tirupati Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment