tirupathi-devasthanam | tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் நாளை (நவ.10) முதல் தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில், நாளொன்றுக்கு ரூ.300 தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இலவச டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்ட்டர் நிலையங்களில் வழங்கப்படும். அதாவது நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேர் வீதம் 10 நாள்களுக்கு 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் விஐபி பிரேக் டிக்கெட்களும் ஆன்லைளில் வெளியிடப்பட உள்ளன. இது தவிர தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி ரூ.500 டிக்கெட்களும் வெளியிடப்பட உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“