திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் புகழ்பெற்ற கோயிலாகும். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் வைகுண்ட துவார தரிசனம் பற்றி திருப்பதி தேவஸ்தானம் முக்கிய தகவல் கூறியுள்ளளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை நடைபெறெ உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமலை- திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால், கோவிலுக்குள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த 10 நாட்களுக்கு குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) போன்றவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது.
புரோட்டோகால் பிரபலங்களை தவிர 10 நாட்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், அதிகபட்ச பக்தர்களை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சாமி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பக்தர்களுக்கு உதவ 3000 இளம் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர்கள், வழிகாட்டிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“