tirupati wedding booking : இந்தியாவின் மிகப்பெரிய தெய்வீக ஸ்தலம் என்றால் அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த அளவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்திய அளவில் பிரசித்தமான ஒரு கோவிலாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கொண்டிருக்கிறது.
இப்படியொரு புனிதமான தளத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பது பெற்றோர்கள் இளைஞர்கள் சிலரின் வாழ் நாள் ஆசையாக இருக்கும். அப்படி திருப்பதியில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? இதுக் குறித்த முழு விபரத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
திருப்பதி தேவஸ்தான மண்டபங்களில் திருமணம் செய்ய 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். திருப்பதி தேவஸ்தான விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை எனில், திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கலாம்.
அங்கும் விடுதிகளை போல் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மணமகன், மணமகள் மற்றும் இருவரின் பெற்றோர் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும் அதுவும் முழு ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு. திருமணம் நடந்த கையோடு அங்கேயே திருமண சான்றிதழும் அளிக்கப்படும்.
திருப்பதியில் இப்படியொரு மாற்றமா? 10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா?
மணமக்கள் தமது பெற்றோருடன் நேரில் வந்து மத்திய வரவேற்பு மையம்-1 மற்றும் வரவேற்பு மைய உதவி அதிகாரியிடம் இருப்பிடம், வயது சான்று உள்ளிட்டவைகளை சமர்ப்பித்து முன்பதிவு செய்யலாம். இந்து மதத்தினருக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படும், வேற்று மதத்தினருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பது கூடுதல் தகவல்.