திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கோடை விடுமுறையில் பக்தர்கள் அதிக அளவில் வருவதை எதிர்பார்த்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களுக்கு சிரமமில்லாமல் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அந்தவகையில், திருப்பதி வரும் பக்தர்களுக்கு ’பஞ்ச தேவாலயம்’ என்ற சுற்றுலா தொகுப்பை ஐஆர்சிடிசி வழங்குகிறது.
இந்த பஞ்ச தேவாலயம் ஸ்பெஷல் பேக்கேஜ் மூலம்
காணிபாக்கம், திருச்சானூர், திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீனிவாச மங்காபுரம் ஆகிய ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பிரபல கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
இது 1 இரவு, 2 நாட்கள் சுற்றுப்பயணமாகும்.
இந்த பேக்கேஜ் திருப்பதி விமான நிலைய, ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது.
இந்த பேக்கேஜை முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளை ஐஆர்சிடிசி ஊழியர்கள் காலை 7 மணிக்கு அழைத்து வருவார்கள். அதன் பிறகு ஹோட்டலில் செக்-இன் செய்ய வேண்டும்.
காலை உணவுக்குப் பிறகு சீனிவாச மங்காபுரம் மற்றும் காணிபாக்கம் கோயில்களுக்குச் செல்லுங்கள். மதிய உணவுக்குப் பிறகு ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதையடுத்து திருப்பதியில் இரவு தங்குதல்.
இரண்டாம் நாள் காலை திருமலைக்குப் புறப்பட்டு, காலை 9 மணிக்கு சிறப்பு நுழைவு தரிசனம் மூலம் திருமலையில் உள்ள பெருமாளை தரிசிக்கலாம். அதன் பிறகு திருச்சானூரில் உள்ள பத்மாவதி அம்மாவாரி கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். தொடர்ந்து திருப்பதி ரயில் நிலையம் மற்றும் திருப்பதி விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்டு சுற்றுப் பயணம் முடிவடைகிறது.
ஐஆர்சிடிசி பஞ்சதேவாலயம் டூர் பேக்கேஜை மூன்று பேருடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டணம் 6,590 ரூபாய், இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்ள 6,800 ரூபாய் ஆகும்.
மேலும் ஒருவர் மட்டும் செல்ல 8,280 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பஞ்ச தேவாலயம் டூர் பேக்கேஜில் ஏசி தங்குமிடம், ஏசி வாகனத்தில் சுற்றிப் பார்ப்பது, திருமலைக்கு சிறப்பு நுழைவு வருகை, காலை உணவு, பயணக் காப்பீடு ஆகியவை அடங்கும்.
இந்த டூர் பேக்கேஜ் பற்றிய கூடுதல் விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“