திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதியில் நாள் முழுவதும் பெருமாளுக்கு நடைபெறும் சேவைகள் முடிந்ததும்தான், ஸ்பெஷல் தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், வி.ஐ.பி தரிசனம் போன்றவை அனுமதிக்கப்படுகிறது
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
ஆந்திராவை பொருத்தவரை, மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல், மே மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களில் திருப்பதி வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனை பயன்படுத்தி பக்தர்கள் ஏழுமலையானை மனதார தரிசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“