திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தேசம் காப்போம் அறக்கட்டளை 20 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர் அவர்னெஸ் அப்பா (எ) சிவசுப்பிரமணி.
மாற்றுத் திறனாளிகளுக்காக திருப்பூர் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பில் இலவச காப்பகம் கட்ட வேண்டும் என்பது இவரது ஆசை. இதற்காகவே பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் நன்கொடை திரட்டி வருகிறார்.
அத்துடன் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறார். இவர் அணிந்திருக்கும் உடை, பயணிக்கும் பைக் முழுவதும் சாலை பாதுகாப்பு, உடல் நலம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
தற்போது கோவை வந்துள்ள சிவசுப்பிரமணி அங்கு மாற்றுத் திறனாளிகளுக்காக நிதி திரட்டி வருகிறார்.
இது போன்ற உடைகளை அணிந்து கொண்டு செல்லும் பொழுது பொதுமக்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதாகவும், அதிகமானோர் உதவி செய்வதாகவும் சிலர் தன்னை விமர்சிப்பதாக கூறுகிறார்..
இவருக்கு உதவி செய்ய விரும்புவோர் +91 75986 91583 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“