ஒரு முறை திருவாதிரை களி செய்து பாருங்க செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
1 கப் அரிசி
2 ஸ்பூன் பாசிப் பருப்பு
4 கப் தண்ணீர்
¼ கப் துருவிய தேங்காய்
4 ஏலக்காய் பொடித்தது
1 ஸ்பூன் நெய்
2.5 கப் வெல்லம்
¼ கப் தண்ணீர்
¼ கப் நெய்
15 முந்திரி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பை சேர்த்து கழுவ வேண்டும். இதை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். இதை குக்கரில் சேர்த்து, தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து வேக வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து கிளரவும். இந்த பாகை குக்கரில் சேர்க்கவும். தொடர்ந்து நெய்யில் வறுத்த முந்திரியை நெய்யுடன் சேர்க்கவும். கிளரவும் சுவையான திருவாதிரை களி ரெடி.