சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விர்ச்சுவல் முறையில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கேரள காவல்துறையின் அறிவிப்பைக் குறிப்பிட்டு, தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்ப்பதன் மூலம் சுமூகமான தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி இரவு 10 மணி வரை 66,821 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இதுவரை 11.12 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றுள்ளனர்.
பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்போ அல்லது பின்னரோ வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்றும் பக்தர்கள் தங்கள் தரிசன நேரத்தை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேரள போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்கூட்டம், சரம்குத்தி, நடைபந்தல் ஆகிய பாரம்பரிய பாதைகளை பயன்படுத்தி கோவிலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்ட போலீசார், சபரிமலையில் ஒவ்வொறு மலை ஏறும் போது 5 நிமிடம் ஓய்வெடுக்குமாறு பக்தர்களை அறிவுறுத்தினர்.
ஏதேனும் அவசரம் ஏற்பட்டால், உதவி எண் 14432-ஐ டயல் செய்து உதவி பெறலாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“